fbpx

இளைஞர்களே..!! தமிழ்நாட்டில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நாளை தூத்துக்குடியில் உள்ள கோரம்பாளையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலையற்ற இளைஞர்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (மே 12) தனியார் துறை வேலைவாய்ப்பு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் எக்கச்சக்கமான தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ என அனைத்து வேலையற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதலுடன் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் நேரில் சென்று கலந்து கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான முழு விவரங்களுக்கு 0461-2340159 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிக்க இதுதான் காரணமாம்..!! இனி தினமும் 30 நிமிடங்கள் இதை செய்யுங்க..!!

Thu May 11 , 2023
பொதுவாக வைட்டமின் டி என்பது சூரிய ஒளி வைட்டமின் (Sunshine Vitamin) என்று அழைக்கப்படுகிறது, இது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். இருப்பினும் வைட்டமின் டி செக்ஸ் வைட்டமின் என்றும் குறிப்பிடப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. பலரும் தங்களுக்கு உடல் அல்லது மன ரீதியாக ஏற்படும் சில பாதிப்புகளால் லோ செக்ஸ் டிரைவால் பாதிக்கப்படுகிறார்கள். Low Sex Drive-க்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணி வைட்டமின் டி குறைபாடு என்பது நிறைய பேருக்கு […]
உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிக்க இதுதான் காரணமாம்..!! இனி தினமும் 30 நிமிடங்கள் இதை செய்யுங்க..!!

You May Like