வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். 2023-24ஆம் ஆண்டுக்கான சத்தீஸ்கர் மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்வர் பூபேஷ் பாகேல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும் அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2500 ஊக்கத் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை இல்லாத இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இந்த பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை ரூ.6500 -இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.