fbpx

நல்லிரவில் பெண்களை துரத்திய இளைஞர்கள்.. குற்றம் செய்ய திமுக கொடி லைசன்சா? – எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை அருகே பெண்கள் சிலர் குடும்பமாக காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த காரை தடுத்து நிறுத்திய திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், தங்கள் காரின் கதவை அடித்து எதிர் காரில் இருந்தோரை (பெண்களை) மிரட்டி உள்ளனர். அந்த இளைஞர்களிடம் இருந்து தப்பிச் செல்ல நினைத்த எதிர் காரில் இருந்த பெண்கள், அவர்களின் காரை ரிவர்ஸ் எடுத்தபடி நீண்ட தூரம் சென்றுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்கள், அப்பெண்களின் காரை ஒரு இடத்தில் வழிமறித்து அவர்களை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.

அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் “இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது” என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.

பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா?

#யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த திரு. ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்? மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Read more : ASER 2024 : உத்தர பிரதேசத்தை விட பின்தங்கியது தமிழ்நாடு.. மாணவர்களின் கற்றல் தரத்தில் முன்னேற்றம்..!!

Next Post

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி..!! கருவை கலைப்பது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும்..!! சென்னை ஐகோர்ட்

Wed Jan 29 , 2025
The Chennai High Court has stated that the girl concerned should be the one to decide whether to abort the fetus, even if she is a minor.

You May Like