fbpx

சொந்த கிராம பெண்களை நிர்வாணமாக்கி இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள்..!! பள்ளி மாணவிகளையும் விடல..!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் ஏஐ செயலி மூலம் சொந்த கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிர்வாண புகைப்படங்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த இளைஞர்கள் தயாரித்து வந்துள்ளனர். AI செயலியால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதை உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

கைது செய்யப்பட்டவர்கள் சிபின் லூகோஸ் (21), எபின் டாம் ஜோசப் (18), ஜஸ்டின் ஜேக்கப் (21) என அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (a) இன் கீழ் “பாலியல் வெளிப்படையான செயல்களைக் கொண்ட பொருட்களை மின்னணு வடிவத்தில் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சித்தரிக்காவின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி கூறினார். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.

கைது செய்யப்பட்ட 3 பேரில் எபின் இந்தாண்டு 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர். சிபின் மற்றும் ஜஸ்டின் என மற்ற இருவரும் தங்களது வாழ்வாதாரத்திற்காக தனியார் பேருந்துகளை சுத்தம் செய்து வருபவர்கள். கடந்த ஜூன் 11ஆம் தேதி சிபின் தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது அவர்களின் இந்த மோசமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது. நண்பர் சிபினின் செல்போனை சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது தனது உறவினரின் நிர்வாணப் புகைப்படம் செல்போனில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.

அப்போது சிபினின் செல்போனை ஆராய்ந்ததில், கேலரியில் தனக்கு தெரிந்த அதே ஊரில் வசிக்கும் வேறு பல பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் ஏராளமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், சிபினுக்குத் தெரியாமல், அவரது செல்போனில் இருந்த சில புகைப்படங்களை தனது போனுக்கு அனுப்பி வைத்து விட்டு, அதுகுறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரில், சிபினும் எபினும் புகைப்படங்களை உருவாக்கி ஜஸ்டினுக்கு அனுப்பியதாக கூறினார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக வருவதற்கு முன்பு, சிபினும் எபினும் தங்கள் செல்போனில் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்துவிட்டனர். ஆனால், ஜஸ்டின் புகைப்படங்களை டெலிட் செய்யவில்லை.
இளைஞர்கள் சமூக ஊடக தளங்களில் இருந்து புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வது மட்டுமின்றி, தங்கள் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி புகைப்படங்களையும் கிளிக் செய்துள்ளனர்.

அவர்களுடன் பள்ளியில் படித்து வந்த சுமார் 40 தோழிகளின் புகைப்படங்களும் இப்படி நிர்வாணமாக மாற்றப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் தேவாலயத்திற்கு வரும்போதும், புனித வெள்ளி அன்று சிலுவை ஊர்வலத்திற்காக மலை ஏறும்போதும் அவர்களின் புகைப்படங்களை கிளிக் செய்து இப்படி நிர்வாணமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தினோம்” என்று போலீசாரின் விசாரணையில் அவர்கள் கூறியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் கிராமத்தில் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கி வந்ததாக காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட மூவரின் மொபைல் போன்களை தடயவியல் பரிசோதனைக்காக சைபர் போலீசாருக்கு அனுப்பி வைத்து விட்டு, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : ’ஆங்கில வழிப் பள்ளிகள் தற்கொலைக்கு நிகரானது’..!! எச்சரிக்கும் என்சிஇஆர்டி இயக்குநர்..!!

English Summary

Police arrested 3 youths for creating nude photos of more than 150 women from their own village.

Chella

Next Post

Whatsapp Update| கூகுள் டிரைவ்-க்கு குட் பாய்!! இனி QR Code போதும்..!! வந்தது புது அப்டேட்!

Wed Jun 19 , 2024
WhatsApp may soon use QR code instead of Google drive to allow chat transfer between phones

You May Like