கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளதாக எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்தனர்.. இந்த விவகாரத்தில் 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளதாக எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.. மாணவி உயிரிழப்பு தொடர்பாக வதந்திகள். போலியான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகாவும் அவர் கூறியுள்ளார்.. 32 வகையான யு டியூப் பக்கங்கள், சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
மேலும் மாணவி மரணத்தில் பொய் செய்திகளை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலை முடக்க நடவடிக்கை டுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியோ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..