யூடியூப் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சார்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக யூடியூப் சி.இ.ஓ ஆக பணியாற்றி வந்த அவர், நேற்று பதவி விலகினார். இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூகுளின் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவராக இருந்த நீல் மோகன், தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் சுமார் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையிலேயே, யூடியூப்-ன் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன், புதிய தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மார்ச் 2008 முதல் நவம்பர் 2015 வரை கூகுளில் காட்சி மற்றும் வீடியோ விளம்பரங்களின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றினார். அதற்கு முன், இணைய விளம்பரச் சேவையான DoubleClick இல் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மோகனுக்கு ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மோகனை ட்விட்டரில் சேரவிடாமல் தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை (ரூ.827 கோடி) அவருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.