fbpx

YouTube | ”இனி ஹம்மிங்கை வைத்தே அது என்ன பாடல் என்று கண்டுபிடிக்கலாம்”..!! யூடியூப் அறிமுகப்படுத்தும் சூப்பர் அம்சம்..!!

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் செயலி ஒவ்வொரு ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் இன்றியமையாத செயலியாக உள்ளது. வீடியோக்களின் தேடுபொறியாக இருக்கும் இவற்றில் அனைத்து விதமான வீடியோக்களையும் பார்க்க முடியும். இதில் வீடியோ பார்ப்பவர்கள் தங்களுக்கு பிடித்திருந்தால் லைக், பிடிக்காவிட்டால் டிஸ்லைக், வீடியோ பற்றி ஏதேனும் கருத்து சொல்ல வேண்டுமானால் கமெண்ட் பகுதியில் கருத்துகளை பதிவிடுவது போன்ற அம்சங்கள் உள்ளன.

இந்நிலையில்தான் யூடியூப் நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு பாடலின் ஹம்மிங்கை வைத்தே அது என்ன பாடல் என்பதை யூடியூப்பில் கண்டுபிடிக்கலாம். உங்கள் தலையில் ஒரு டியூன் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், அது என்ன பாடலாக இருக்கும் என பலமுறை யோசித்திருப்பீர்கள். கடைசி வரை அதை உங்களால் நினைவுபடுத்தவே முடியமல் போய்விடும். இனி அந்த பிரச்சனை இருக்காது.

இந்நிலையில், யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது இசைக்கப்படும் பாடலை ஹம்மிங் செய்வதன் மூலம் அல்லது பதிவு செய்வதன் மூலம் யூடியூப்பில் ஒரு பாடலைக் கண்டறியும் திறனை யூடியூப் சோதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அம்சம் தற்போது iOS பயனர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த அம்சத்தை யூடியூப் எப்போது அறிமுகப்படுத்தும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

Isha | மூடப்படுகிறதா ஈஷா யோகா மையம்..? சிக்கலில் மாட்டிவிட்ட தமிழ்நாடு அரசு..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Thu Aug 24 , 2023
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு எந்வொரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், விலங்குகளின் வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ஈஷா யோகா பவுண்டேசனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி […]

You May Like