fbpx

இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்த யுவன்..! விஜயின் ரசிகர்கள் தான் காரணமா? என்ன நடந்தது?

கோட் படத்தின் விசில் போடு பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  2 மில்லியனுக்கும் அதிகமான Followers கொண்ட தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர். அவருடைய இசையில் ஒளிபரப்பான அனைத்து பாடல்களும் மெகா ஹிட் பாடல்களாக மாறியுள்ளது. தற்பொழுது அவர் பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படத்தில் இசையமைப்பாளராக பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மதன் கார்த்தியின் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், தளபதி விஜய் அவர்களின் குரலில் சில தினங்களுக்கு முன்பு “கோட்” திரைப்படத்திலிருந்து “விசில் போடு” என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியானது. விசில் போடு என்ற டைட்டிலில் விஜய் பாடிய இந்தப் பாடலில், அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் ஆட்டம் போட்டிருந்தனர். விசில் போடு சாங் அதிக எதிர்பார்ப்போடு வெளியானதால் 24 மணி நேரத்திற்குள்ளாகவே பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. 

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அதே நேரம் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கு சரியாக இசையமைக்கவில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. யுவனின் இசையை ரசிகர்கள் ரொம்பவே ட்ரோல் செய்து வந்தனர்.  மங்காத்தா படத்தில் அஜித்துக்காக தரமான குத்து பாடல் கொடுத்த யுவன், கோட் படத்தில் விஜய்யை ஏமாற்றிவிட்டதாக கமெண்ட்ஸ் செய்தனர். முக்கியமாக விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவருமே பெஸ்ட் டான்ஸர்ஸ், அப்படி இருக்கும் போது அவர்களுக்காக இன்னும் தரமான பாடலை கொடுத்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்துள்ளது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் யுவன், இன்ஸ்டாவில் இருந்து வெளியேறியதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதுபற்றி யுவன் தாப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அவர் கடைசியாக பதிவிட்ட பதிவிற்கு அதிக அளவில் நெகடிவ் கமெண்ட் வந்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Next Post

காதலியை கரம்பிடித்தார் சன் டிவி சீரியல் நடிகர்..!! அட இவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா..?

Thu Apr 18 , 2024
சன் டிவியில் 1,000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா. இந்த சீரியலில் ஹீரோவாக விராட்டும், ஹீரோயினாக டெல்னா டேவிஸும் நடித்து வருகின்றனர். கடந்த 2020இல் தொடங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் அண்மையில் படமாக்கப்பட்டது. சீரியல் முடிந்த கையோடு அந்த தொடரின் நாயகன் விராட்டுக்கு […]

You May Like