fbpx

மும்பையில் ஒருவருக்கு ஜிகா வைரஸ்!… அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!

மும்பையில் 79 வயது முதியவருக்கு ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த 79 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் பாதிப்பு குறித்து அறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் அந்த நோயாளிக்கு ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது. இருப்பினும் அவர் கடந்த 2-ந் தேதி நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். ஜிகா வைரஸ் நோய் என்பது ஜிகா எனப்படும் ஒருவகை வைரஸ் மூலம் ஏற்படும் நோயாகும். டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக இ்ந்த நோய் பரவுகிறது.

ஜிகா வைரஸ் நோய் எளிமையாக கட்டுப்படுத்த கூடிய நோயாகும். இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இருக்காது. பாதிக்கப்பட்ட வீடுகளில் அருகில் உள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வேறு யாருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. கட்டிடங்களை சுற்றியுள்ள நீரில் எடிஸ் கொசுவின் இனப்பெருக்கம் கண்டறியப்பட்டு அதை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மக்கள் பீதியடையாமல் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், தோல் வெடிப்பு, வெண்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி போன்றவை ஜிகா வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாகும்.

Kokila

Next Post

திடீர் திருப்பம்...!முடிவுக்கு வந்ததா ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை...? அதிமுகவில் அடுத்த என்ன...?

Sat Aug 26 , 2023
தமிழக முன்னாள் துணை முதல்வரும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு தடை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11, 2022 அன்று அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீர்மானத்தில் ஒற்றை நீதிபதி தலையிட மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் […]

You May Like