உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் கும்பியே 23ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மாதவேரே 2ரன்களுக்கும், கேப்டன் எர்வின் 47 ரன்களுக்கும், வில்லியம்ஸ் 23 ரன்களுக்கும் அவுட் ஆகினர், பிறகு நிதானமாக ஆடிய சிகேந்தர் ராசா 68 ரன்களும், ரியான் பர்ல்50 ரங்களும் எடுத்து அணியை வலுவான நிலைக்கு தள்ளினர். 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாபே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது.
269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான கைல் மேயர்ஸ் 58 ரன்களுக்கும், பிராண்டன் கிங் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர், அதன்பிறகு வந்த சார்லஸ்(1), ஹோப்(30), பூரன்(34), சேஸ்(44), ரோமன் பவல்(1), ஹோல்டர்(19), கீமோ பால்(1), ஹோஸின்(3),அல்சாரி ஜோசப்(3)என்று, ஜிம்பாபே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாபே அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.