அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய 200 லாட்டரி சீட்டுகளிலும் ஜாக்பாட் அடித்து ரூ.8 கோடியை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் வர்ஜீனா நகரில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியைச் சேர்ந்தவர் அலிகெமி. இவர் வர்ஜீனியாவின் லாட்டரி டிக்கெட்டுக்களை வாங்கினார். 200 லாட்டரிடிக்கெட்டுகளை வாங்க நினைத்த அவர் ஒவ்வொன்றையும் தனது பிறந்த மாதம் மற்றும் தேதி ஆகியவற்றை வைத்து லாட்டரிகளை தேர்வு செய்தார். மேலும் மாதங்களின் எண்களின் கூட்டுத்தொகை பிறந்த மாதமாக வரும். 0-2-6-5 என்ற கலவையை பயன்படுத்திதான்அவர் டிக்கெட்டுகளை தேர்ந்தெடுத்தார்.
ஒவ்வொன்றும் அமெரிக்க மதிப்பில் 1 டாலர் என 200 டாலருக்கு 200 லாட்டரிக்களை வாங்கினார். மாலை நேரத்தில் பந்தயம் தொடங்கியது முதல் பரிசாக 5000 டாலர் பரிசு கிடைத்தது. இதே போல அடுத்தடுத்து லக்கி டிரா நடைபெற்றது. ஒவ்வொன்றிலும் அவர் வெற்றி பெற்றார். மொத்தம் அவர் வெற்றி பெற்ற தொகையின் மதிப்பு ஒரு மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் ஆகும்.
தான் பெற்ற பரிசுத் தொகையை பள்ளி மாணவர்களின் படிப்பு செலவுக்காக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். நான் பரிசு வென்றதை வார்த்தையால் சொல்ல முடியவில்லை , மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றேன். என அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.