மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியான சோமாட்டோ தற்போது தனது நிறுவனத்தின் பெயரை மாற்றி உள்ளது. இதுவரை சோமாட்டோ லிமிடெட் என்கிற பெயரில் இயங்கி வந்தது. தற்போது மற்றொரு டெலிவரி ஸ்டார்ட்அப்பைப் பெறுவதற்கான ஒப்புதலைப் பெற்ற பிறகு அதன் பெயரை இடெர்னல் லிமிடேட் (Eternal Ltd) என மாற்ற உள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், இப்போது முறையாக பெயரை மாற்ற பங்குதாரர்களின் ஒப்புதல் தேவைப்படும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சோமாட்டோ நிறுவனமானாது ஆண்ட் குரூப் கோ., டெமாசெக் ஹோல்டிங்ஸ் மற்றும் கோல்மான் சாச்ஸ் குரூப் ஆகிய பெரு நிறுவனங்களின் மூலம் நிதியை பெற்று இயங்கி வருகிறது. Blinkit என பெயரிடப்பட்ட மளிகை விநியோக தொடக்கத்திற்கான ஒப்பந்தத்திற்குப் பிறகு, குறைந்தபட்சம் நான்கு யூனிட்களுக்கு தலைமை அதிகாரிகளை நியமிக்கும் என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெயர் மாற்றத்திற்கு காரணம் : இந்த முடிவு நிறுவனத்திற்கு ஒரு புதிய அத்தியாயம் என்று Zomato நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை அதிகாரியான தீபிந்தர் கோயல் கூறினார். ஏனெனில் இப்போது நிறுவனம் உணவு விநியோகத்தைத் தாண்டி மற்ற துறைகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறது.
‘நாங்கள் பிளிங்கிட்டை வாங்கியபோது, ’எடர்னல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினோம். ஆனால் அது பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. ஜொமாட்டோவைத் தாண்டி மளிகைக் கடைகள் மற்றும் டிக்கெட் விற்பனை போன்ற வணிகங்களில் சிறந்த எதிர்காலத்தைக் காணத் தொடங்கும் நாளில், நிறுவனத்தின் பெயரை எடர்னல் லிமிடெட் என்று பகிரங்கமாக மாற்றுவோம் என்றும் நாங்கள் நினைத்தோம். இப்போது பிளிங்கிட் மூலம் நாங்கள் அந்த இலக்கை அடைந்துவிட்டதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
பெயரை மாற்றுவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும்? எடர்னல் லிமிடெட் நான்கு வகையான வணிகங்களைக் கொண்டிருக்கும், அவற்றில் Zomato, Blinkit, District மற்றும் Hyperpure ஆகியவை அடங்கும். பங்குதாரர்கள் மாற்றத்தை அங்கீகரித்தவுடன், நிறுவனம் அதன் நிறுவன வலைத்தளத்தை zomato.com இலிருந்து eternal.com ஆக மாற்றும், மேலும் அதன் பங்கு டிக்கர் ZOMATO இலிருந்து ETERNAL ஆக மாறும்.
எடர்னல் ஒரு சக்திவாய்ந்த ஆனால் சவாலான பெயராக விவரித்த கோயல், ‘அதற்கு ஏற்ப வாழ்வது கடினமான பணி’ என்றார். ஏனென்றால் ‘இடெர்னல் ‘ என்ற வார்த்தை ஒரு வாக்குறுதியையும் முரண்பாட்டையும் கொண்டுள்ளது. இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, ஒரு நோக்க அறிக்கை என்றும் அவர் கூறினார்.
Read more ; அஜித் முதல் ரெஜினா வரை.. விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் இதோ..