சோமேட்டோ ஊழியரின் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பண்டிகை காலங்கள் என்றாலே கொண்டாட்டம்தான். குறிப்பாக, திருமணம் நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக கொண்டாடுவது என்பது வழக்கமான ஒன்று. நம்ம ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஏதாவது பாட்டு சத்தம் கேட்டால் நம்மையே அறியாமல் ஒரு உத்வேகம் பிறக்கும். அப்படிப்பட்ட ஒரு கல்யாண நிகழ்ச்சியில் பாட்டு ஒலிக்கு இளைஞர் ஒருவர் நடனமாடும் ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருமண வீட்டின் மாடியில் உறவினர்கள் அனைவரும் நடனமாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால், டெலிவரி ஊழியர் அவரது வீட்டிற்கு முன்னால் நின்று, அங்கு ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடி மகிழ்ந்தார்.
வீடியோவை காண: https://www.instagram.com/reel/CmimlngqspJ/?utm_source=ig_web_copy_link