fbpx

போலீசாரின் லத்தியை பிடிங்கி அவர்களையே கொடூரமாக தாக்கிய கும்பல்..!! விருதுநகரில் அதிர்ச்சி..!! நடந்தது என்ன..?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகே இருக்கும் நேரு சிலை அருகே உள்ள டாஸ்மாக்கில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரைத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இசக்கி, ரத்தக் காயங்களுடன் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், இசக்கியைத் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அவர்கள் நேரு சிலை பின்புறம் இருக்கும் மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் விசாரித்த வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர், மறுநாள் காலை அந்த கும்பலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தக் கும்பல், காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில், காவலர் கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி அவரையேத் தாக்க தொடங்கினர். இதைத் தடுக்கச் சென்ற மற்றொரு காவலரையும் அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு காயம் அடைந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து தாக்குதலுக்கு உள்ளான காவலர்கள் அளித்த புகாரின் பேரில் பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா மற்றும் பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : 3 நொடி காட்சிகளுக்கு ரூ.10 கோடி வாங்கிய தனுஷ்..? நயனிடம் இருந்து கைமாறிய பணம்..!! புட்டு வைத்த பயில்வான்..!!

English Summary

At one point, they grabbed the lathi from the guard’s hand and started beating him. The mob also assaulted another policeman who tried to stop this.

Chella

Next Post

மழைக்காலங்களில் உங்கள் வாகனங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Sat Nov 16 , 2024
We have seen many videos on social media like bridges and roads over the river collapsing and cars being swept away by the river.

You May Like