தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்… பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யபப்ட்டார், இதன் மூலம் நாளை பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார்..
நிதிஷ் குமார் மாலையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை முறையாக கோர உள்ளார்.. 75 வயதான அவர் நாளை பாட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக நாளை பதவியேற்க உள்ளார்.
பீகாரின் 243 சட்டமன்ற இடங்களில் 202 இடங்களை வென்ற, தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பாஜக 89 இடங்களையும், ஜேடியு 85 இடங்களையும், எல்ஜேபி(ஆர்வி) 19 இடங்களையும், எச்ஏஎம் 5 இடங்களையும், ஆர்எல்எம் 4 இடங்களையும் வென்றது.
வாக்குப்பதிவுக்கு முன்னதாக, ஜீவிகா, ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் மற்றும் உதவித்தொகைகளை உயர்த்துவது உட்பட பல நலத்திட்ட நடவடிக்கைகளை நிதிஷ் குமார் மேற்கொண்டார். அவரது அரசாங்கத்தின் முதன்மையான முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் தலா ₹10,000 நிதியுதவி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



