பீகார் முதல்வராக இன்று 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். பாட்னாவின் காந்தி மைதானத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய பிரமாண்டமான விழாவில் ரலை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிற முக்கியத் தலைவர்கள் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார்.
அவரை தொடர்ந்து பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றார் அவர் துணை முதல்வராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் விஜய் சின்ஹாவும் மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார், மேலும் சாம்ராட் சவுத்ரியுடன் இவரும் துணை முதல்வராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அமைச்சர்களின் முழு பட்டியல்
சாம்ராட் சௌத்ரி
விஜய் குமார் சின்ஹா
விஜய் குமார் சவுத்ரி
பிஜேந்திர பிரசாத் யாதவ்
ஷ்ரவன் குமார்
மங்கள் பாண்டே
டாக்டர் திலீப் ஜெய்ஸ்வால்
அசோக் சௌத்ரி
லேசி சிங்
மதன் சாஹ்னி
நிதின் நவீன்
ராம்கிரிபால் யாதவ்
சந்தோஷ் குமார் சுமன்
சுனில் குமார்
ஜமா கான்
சஞ்சய் சிங் டைகர்
அருண் சங்கர் பிரசாத்
சுரேந்திர மேத்தா
நாராயண் பிரசாத்
ராம நிஷாத்
லக்கேந்திர குமார் ரோஷன்
ஸ்ரேயாசி சிங்
டாக்டர் பிரமோத் குமார்
சஞ்சய் குமார்
சஞ்சய் குமார் சிங்
தீபக் பிரகாஷ்
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா, ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் தர்மேந்திர பிரதான் போன்ற பிற பெரிய தலைவர்கள் மற்றும் குறைந்தது ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
2025 பீகார் தேர்தல் முடிவுகள்:
சமீபத்தில் முடிவடைந்த பீகார் தேர்தலில் ஜே.டி.(யு) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.. இந்த கூட்டணி மொத்தம் உள்ள 243 சட்டமன்ற இடங்களில் 202 இடங்களை வென்றது. 89 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறியது, ஜேடியு 85 இடங்களையும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 இடங்களையும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஐந்து இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா நான்கு இடங்களையும் வென்றது.
75 வயதான நிதிஷ் குமார் நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், பின்னர் அனைத்து என்.டி.ஏ கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் உரிமை கோருவதற்கான முன்மொழிவை சமர்ப்பித்தார். ராஜினாமா செய்வதற்கு முன், நிதீஷ் குமார் பீகாரில் என்.டி.ஏ கூட்டணியின் சட்டமன்ற தலைவராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்பது இது 10-வது முறை… ஜே.டி.(யு) தலைவர் தனது அரசியல் வாழ்க்கையில் பல முறை கூட்டணிகளை மாற்றியுள்ளார், அரசாங்கத்தை மாற்றியுள்ளார், ஆனால் அவர் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : Breaking : மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!



