தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டனமுன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்களும் நீதிபதிகள் தண்டபானி, ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது கரூர் துயரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு மனுவும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு உரிய விதிமுறைகள் வகுக்கக் கோரிய மனு விசாரணை தொடங்கியது.. அப்போது அனுமதி அளிக்கப்பட்ட இடம் மாநில சாலையா அல்லது தேசிய நெடுஞ்சாலையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே அரசு கட்சிகள், கூட்டம் நடத்திய இடத்தில் தான் விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.. அனைத்து கட்சிகளுக்கும் விதிகளின் படியே அனுமதி வழங்கப்பட்டது..
அப்போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் அரசின் கடமை.. யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, எந்த கட்சிக்கும் நெடுஞ்சாலைகளில் பரப்புரை நடத்த காவல்துறை அனுமதி அளிக்காது என்று அரசு தரப்பு வாதிட்டது..
தொடர்ந்து விஜய் பரப்புரை கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? போகிறவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் யாராவது அவர்களை கட்டாயப்படுத்தினார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. மேலும் மக்களுக்கு குடிநீர், மருத்துவ உதவிகள் செய்து தருவதை உறுதி செய்ய வேண்டும்.. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இனி பரப்புரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. இதையடுத்து கட்சி கூட்டங்களுக்கு விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது..
Read More : ரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக.. இபிஎஸ்-க்கு கொடுத்த அசைன்மெண்ட் இதுதான்.. முதல்வர் ஸ்டாலின் சாடல்..



