Breaking : அடுத்த ஷாக்..! சேலம் விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் மயக்கம்..!

salem vijay

தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. மேலும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது..


இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்க காலையில் இருந்தே நிர்வாகிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.. அதிக வெயில் இருந்ததால் தவெக நிர்வாகிகளுக்கு தொப்பி வழங்கப்பட்டது.. அதே போல் குடிநீர், பிஸ்க்டர் ஆகியவை வழங்கப்பட்டது..

எனினும் சேலம் பகுதியில் இன்று காலை முதலே அதிக வெப்பம் நிலவியதால் 3 பேர் மயக்கமடைந்தனர்.. இவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.. இந்த நிலையில் தவெக நிர்வாகி கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.. தவெக நிர்வாகி கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

RUPA

Next Post

சூரியன், புதன் சுக்கிரன் சேர்க்கை.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்..!

Fri Feb 13 , 2026
ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சிகள் எப்போதும் ஆர்வத்திற்கும் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும். பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் ஒரு அரிய நிகழ்வு நடக்கிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன், அறிவுசார் புதன், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் கும்ப ராசியில் ஒன்றாக வருகின்றன. ஜோதிடத்தின்படி இந்த ‘திரிகிரஹி யோகம்’ மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது, மேலும் இது பன்னிரண்டு ராசிகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சுப பலன்களைப் […]
zodiac planet

You May Like