Breaking : திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்..! திமுக உடன் கூட்டணியா?

526858 stalin ops udhay

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.


இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர், சிலர் திமுகவிற்கும், வேறு சிலர் தவெகவுக்கும் சென்றுவிட்டனர். ஓபிஎஸ்-ன் அரசியல் ஆதரவாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டார்.. இதனால் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது..

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. எனினும் முதலமைச்சரை ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை..

திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பாரா? என்பது தெரியவில்லை.. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப் போகும் மாற்றத்திற்கான முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..

RUPA

Next Post

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.. கனிமொழி திட்டவட்டம்..!

Fri Feb 20 , 2026
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]
rahul gandhi stalin kanimozhi

You May Like