Breaking : ஒரே நாளில் ரூ.26,000 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி.. தங்கத்திற்கு டஃப் கொடுக்கும் வெள்ளி விலை..!

gold silver price

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை மாலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.100 உயர்ந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் இன்று மாலை ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று மாலையும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 20 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.6 உயர்ந்து ரூ.280க்கு விற்பனையாகிறது.. இதனால் இன்று ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு ரூ. 26,000 உயர்ந்து ரூ. 2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : குட்நியூஸ்..! புதிய கேஸ் இணைப்பு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. ரூ. 300 மானியமும் கிடைக்கும்!

RUPA

Next Post

புஷ்பா 2 கூட்ட நெரிசல் சம்பவம்: அல்லு அர்ஜுனின் பெயர் குற்றவாளியாக சேர்ப்பு.. குற்றப்பத்திரிகை தாக்கல்..!

Sat Dec 27 , 2025
டிசம்பர் 2024-ல் ஹைதராபாத் சிக்கட்பள்ளி பகுதியில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசல் (Stampede) சம்பவம் தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 23 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை […]
hyderabad allu arjun

You May Like