பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..
இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது..
இதனிடையே பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு செய்தது. இந்த சீராய்வு மனு விசாரணையில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் மிகத் தெளிவாக அன்புமணியே பாமகவின் தலைவர் என்றும், அவருக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாமக தலைவராக தேர்தல் ஆணையம் தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.. மேலும் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் அதில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.. ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்க கோரியும் மனு தாக்கல் செய்ய்யப்பட்டது..
இந்த சூழலில் பாம தலைவராக தேர்தல் ஆணையம் தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க கோரிய ராமதாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. மேலும் மாம்பழ சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது..
இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்த நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. மேலும் மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று கேள்வி எழுப்பிய என்றும் தலைமை நீதிபதி அமர்வு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொர்வதா எனவும் காட்டம் கேள்வி எழுப்பியது.. மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.. உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More : திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.. கனிமொழி திட்டவட்டம்..!



