Breaking : ரெட் அலர்ட்.. நாளை இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Rain 2025 1

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த டிட்வா புயல் இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்காக நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட-வடமேற்காக நகர்ந்து, நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது…


இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமதாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாளை கடலூரில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Flash : டிட்வா புயல்.. தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. பேய் மழை கொட்டும்..!

RUPA

Next Post

மதியம் கொஞ்ச நேரம் தூங்கினால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..? – ஆய்வில் வெளியான தகவல்

Fri Nov 28 , 2025
Are there so many benefits to the body if you take a short nap in the afternoon? - Information revealed in the study
sleeping woman

You May Like