டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது குறித்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இரவு முழுவதும் சோதனைகளை மேற்கொண்டு 6 பேரை கைது செய்தது. புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன் நபியின் மூன்று குடும்ப உறுப்பினர்கள் உட்பட, ஃபரிதாபாத் பயங்கரவாத நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது.. மேலும் 2,900 கிலோ வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த மற்ற இரண்டு மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று கூறப்படுகிறது..
செங்கோட்டை கார் வெடிப்பில் டாக்டர் உமர் ஒரு முக்கிய இணைப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர், ஏனெனில் ஹூண்டாய் i20 காரை அவரே வாங்கினார். ஃபரிதாபாத் பயங்கரவாத நெட்வொர்க் தொடர்பான தொடர்பான விசாரணை தொடங்கியதிலிருந்து டாக்டர் உமர் உன் நபி காணாமல் போயிருந்தாலும், அவரது மூன்று உறவினர்கள் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது..
இந்த நிலையில் இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.. போக்குவரத்து நெரிசல் மிக்க பரபரப்புடன் இயங்கிய அந்த சாலையில் இருந்த சிக்னலில் கார்கள் மெதுவாக சென்று கொண்டிருந்த போது கார் வெடித்து சிதறியதை பார்க்க முடிகிறது..
இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ தீவிரப்படுத்தி உள்ள நிலையில், சம்பவ இடத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட தடங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.. மெதுவாக சென்ற கார் சிக்னலில் வெடித்ததாக டெல்லி காவல்துறை ஆணையர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.. கார் வெடித்து சிதறிய போது அருகில் இருந்து பல வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால் தான் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்..
Read More : டெல்லி கார் வெடிப்பு.. குடியரசு தினம், தீபாவளிக்கே போட்ட சதித்திட்டம்.. விசாரணையில் பகீர் தகவல்கள்!



