Breaking : ரெப்போ ரேட் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்..!

rbi repo

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது.


இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக செய்துள்ளது. நாட்டில் சில்லறை பணவீக்கம் (retail inflation) மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், நாட்டின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைக் காண்கிறது என்பதால் ரெப்போ விகிதத்தை குறைத்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன்களைப் பெறும்போது, ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமாகும். இந்த விகிதம், பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

உதாரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும், இதனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தையும் அதிகரிக்கும். ஆனால் தற்போது ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளும் கடன் விகிதத்தை குறையும். இதனால் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதம் குறையும், மேலும் கடன்களுக்கான EMI குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. தங்கம் விலை இன்று சற்று குறைவு.. எவ்வளவு தெரியுமா?

RUPA

Next Post

ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு நாள்.. செங்கோட்டையன் போட்ட ட்வீட்..!! குழப்பத்தில் தவெகவினர்..

Fri Dec 5 , 2025
Jayalalithaa's 9th death anniversary.. Sengottaiyan's tweet..!! TVK in confusion..
jayalalithaa vs sengottaiyan 1

You May Like