கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.2160 உயர்ந்து ரூ.1,16,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த 3 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2640 குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.2160 அதிகரித்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Read More : ஹோலிக்கு முன் PF சந்தாதாரர்களுக்கு நற்செய்தி..! மார்ச் 2 அன்று முக்கிய கூட்டம்..!



