Breaking : SIR போராட்டம்.. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது; தலைமை செயலாளர் எச்சரிக்கை..!

TN Strike 2025

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் நடந்து வருகிறது.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..


இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளது..  அதீத பணி நெருக்கடிகளை களைந்திட SIR பணிகள் புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த பணிகள் உரிய திட்டமிடல் மற்றும் பயிற்சி அளிக்காமலும் பணியிடங்கள் மற்றும் நிதி வழங்காமல் அவசர கதியில் மேற்கொள்வதற்கு நிர்பந்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது அனைத்து நிலை வருவாய் ஊழியர்களுக்கு கடுமையான பணி நெருக்கட்சிகள் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வருவாய் துறை சங்கம் தெரிவித்துள்ளது..

இந்த நிலையில் நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. மருத்துவ விடுப்பை தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More : மக்களே அலர்ட்..! இன்று சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வெளுத்து வாங்கும்..!

RUPA

Next Post

ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய நற்செய்தி.. இனி பீட்சா, பர்கர், KFC சிக்கன் கிடைக்கும்! ரயில்வே முக்கிய முடிவு!

Mon Nov 17 , 2025
இந்திய ரயில் நிலையங்களை விமான நிலைய பாணி வசதிகளுக்கு இணையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மெக் டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பீட்சா ஹட், பாஸ்கின் ராபின்ஸ், ஹால்டிராம்ஸ், பிகானர் வாலா போன்ற பிரீமியம் பிராண்ட் உணவு விற்பனை நிலையங்களை ரயில் நிலையங்களில் அமைக்க ரயில்வே இப்போது அனுமதித்துள்ளது. இடம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏலம் நிலையங்களில் இந்த பிரீமியம் விற்பனை நிலையங்களுக்கான இடம் ஐந்து ஆண்டுகளுக்கு […]
indian railways jpg 1

You May Like