இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜர் போர் விமானம் இன்று துபாய் ஏர்ஷோவில் வானில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு விமான சாகங்களை செய்து கொண்டிருந்தபோது இந்த போர் விமானம் திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது..
எனினும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினாரா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.. விபத்துக்குப் பிறகு கருப்பு புகை விமான நிலையம் முழுவதும் உயர்ந்து கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்..
முந்தைய நாள் தேஜஸ் பொர் விமானத்தில் எரிபொருள் கசிந்ததாக கூறப்படுகிறது, இதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..
தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறையாகும்.. முதல் விபத்து 2024ஆம் ஆண்டு ஜெய்சல்மேர் அருகே ஏற்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் துபாய் ஏர் ஷோ தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, ஹோஸ்ட் ஏர்லைன் எமிரேட்ஸ் தனது 40வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறது.
இந்த நிகழ்ச்சி, உலகளாவிய ஆயுதத் துறைக்கும் பெரும் மேடையாக மாறியுள்ளது. அதேசமயம், நீண்ட தூர சேவைகளுக்குப் பிரசித்தமான எமிரேட்ஸ் மற்றும் அதன் குறைந்த செலவு சகோதரி நிறுவனமான ப்ளை துபாய் ஆகியவை பெரிய அளவிலான விமான ஆர்டர்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது…
Read More : 15 பேர் பலி; பாய்லர் வெடித்து பயங்கர விபத்து.. பாகிஸ்தானில் சோகம்..!



