2018-ம் ஆண்டு, கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் குன்றத்தூர் அபிராமி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வர கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய்.. இவரின் மனைவி அபிராமி.. இந்த தம்பதிக்கு அஜய், என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.. அபிராமிக்கும் அதே பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் கள்ளக் காதல் இருந்துள்ளது.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மகன், மகளை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து அபிராமி கொலை செய்தார்.. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது..
இந்த வழக்கில் அபிராமி, கள்ளக்காதல் மீனாட்சி சுந்தரம் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டது.. இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, குழந்தைகளை கொன்ற அபிராமி குற்றவாளி என காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. அவருக்கான தண்டனை விவரங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி அபிராமிக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் கள்ளக்காதலன் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது..
Read More : தன்னை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்தாததால் கணவரை கொன்ற மனைவி.. தற்கொலை செய்து கொண்டதாக நாடகம்..