Breaking : அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜன. 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

vijay highcourt

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன..


இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வந்தது.. விசாரணையின் போது அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.. எனினும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தவெக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்தது..

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் பரிசீலித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆட்சேபம் இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

Read More : Flash : காலையிலேயே குட்நியூஸ்.. வெள்ளி விலை ரூ.3,000 குறைந்தது.. தங்கம் விலையும் அதிரடி சரிவு..!

English Summary

The High Court has ordered that the guidelines for political gatherings must be published in the Government Gazette by January 15.

RUPA

Next Post

டயட் மட்டும் போதாது..!! மீண்டும் எடை அதிகரிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!! ஆராய்ச்சியாளர் சொல்லும் ரகசியம்..!!

Fri Dec 19 , 2025
இன்றைய அவசர உலகில், உடல் எடையை குறைப்பது என்பது ஒரு வர்த்தகமாகவே மாறிவிட்டது. “7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைக்கலாம்.. பத்தியம் இல்லாமல் எடையை குறைக்கலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டீடாக்ஸ் டீ (Detox tea), அதீத பட்டினி, கடினமான உடற்பயிற்சி சவால்கள் எனப் பலரும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர். ஆனால், இப்படி வேகமாக எடையை குறைக்கும் பலருக்கும், மீண்டும் அதே எடை மிக […]
Diet Food 2025

You May Like