Breaking : தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு..! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! உற்சாகத்தில் விஜய் கட்சியினர்..!

vijay 2 1

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன..


அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை விஜய் அமைத்தார்.. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை விஜய் அமைத்துள்ளார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை தவெக தரப்பு அணுகியது. விசில், ஆட்டோ ரிக்‌ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியல் தவெக சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.. தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தவெகவுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது..

தேர்தல் ஆணையம் வெளியிட்ட 184 ஒதுக்கப்படாத சின்னங்களில், 182வது சின்னமாக ‘விசில்’ உள்ளது. விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் விசில் சின்னம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்ததால், விசில் சின்னத்தையே முதலில் கேட்டது. இந்த சூழலில் விசில் சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது..

‘விசில்’ சின்னத்திற்கே கட்சி அதிக முக்கியத்துவம் அளிக்க காரணம் ‘பிகில்’ திரைப்படத்துடன் தொடர்புடையது. எளிமையான, மக்கள் சுலபமாகத் தொடர்புபடுத்தக்கூடிய, விரைந்து வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய சின்னமே கட்சிக்குத் தேவை என்று விஜய் கருதுவதாக கூறப்படுகிறது.

பேரணிகளின் போது தொண்டர்களிடையே எடுத்துச் செல்லவும், விநியோகிக்கவும் எளிதாக இருக்கும் என்பதால், விசில் தவெகவிற்கு சாதகமாக இருக்கும். அதன்படியே தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தகவல் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சிக்கலுக்கு மத்தியில் விஜய்யின் அடுத்த மூவ்.. தவெக முக்கிய அறிவிப்பு..!

RUPA

Next Post

உங்கள் கழுத்து பகுதியில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப கவனம்..! தைராய்டு புற்றுநோய் இருக்கக்கூடும்..!

Thu Jan 22 , 2026
யாருக்கு என்ன நோய் வரும் என்று தெரியாத காலக்கட்டம் இது. குறிப்பாக, சில புதிய வகை புற்றுநோய் பாதிப்புகள் மிகவும் கவலை அளிப்பவையாக மாறி வருகின்றன. தைராய்டு புற்றுநோய் அவற்றில் ஒன்றாகும். இந்த பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. ‘தைராய்டு’ என்பது நமது கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தச் சுரப்பி கழுத்தின் உள்ளே […]
thyroid 1

You May Like