2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் :
* வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* வருமான வரித்தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.
* ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
* சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
* வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு.



