Breaking : 4-வது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர்.என்.ரவி..!

rn ravi walkout

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. வழக்கமாக ஆளுநர் உரையை தொடங்கும் போது நேரலை அளிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நேரலை அளிக்கப்படவில்லை.. சட்டப்பேரவையின் செய்தியாளர் அறையிலும் ஆடியோ கட் செய்யப்பட்டது.. இதனால் சற்று சலசலப்பு நிலவியது..


முன்னதாக சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்..

இந்த ஆண்டும் ஆளுநர் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர். என்.ரவி. அவர் தனது உரையை படிக்காமல் வெளியேறுவது இது வது 4-வது ஆண்டாகும்.. தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறிய அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். தேசிய கீதம் பாட வேண்டும் என்று பலமுறை கூறியும் ஏற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்..

ஆளுநர் – அரசு மோதல்

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை..

2023-ம் ஆண்டு ஆளுநர் தனது மகளிர் முன்னேற்றம், சுய மரியாதை, மதச்சார்பின்மை, கலைஞர் போன்ற வார்த்தை படிக்கவில்லை.. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவையில் கூறியதால் ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது..

கடந்த ஆண்டு, அதாவது 2025-ல் ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் கூடியது.. இந்த கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர். ஆர்.என்.ரவி வெளியேறினார்.. இப்படி ஆளுநர் உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி 4-வது ஆண்டாக மீண்டும் தனது உரையை புறக்கணித்துள்ளார்..

Read More : Breaking : ஒரே நாளில் ரூ.12,000 உயர்வு; புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் இதோ..!

RUPA

Next Post

“சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல..” முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்..!

Tue Jan 20 , 2026
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது..  சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த ஆண்டும் ஆளுநர் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர். என்.ரவி. அவர் தனது உரையை படிக்காமல் வெளியேறுவது இது வது 4-வது ஆண்டாகும்.. தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறிய அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். […]
tn assembly stalin rn ravi

You May Like