Breaking : இதுவே முதன்முறை ஒரே நாளில் ரூ.1680 உயர்வு.. ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

jewels

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. வார இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது..

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது தங்கம் விலை.. காலை ரூ.560, மாலையில் ரூ.560 என ஒரே நாளில் மொத்தம் ரூ.1120 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது, ஒரு சவரன் ரூ.84,000ஐ தொட்டது.

இந்த சூழலில் ஒரே நாளில் தங்கம் விலை 2வது முறையாக உயர்ந்துள்ளது.. இன்று காலை ரூ. 560 உயர்ந்த தங்கம் விலை மாலை ரூ.1,120 உயர்ந்தது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.10,640க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ரூ. 85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று மாலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.  ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,50,000 விற்பனையாகிறது.

Read More : நடிகர் துல்கர் சல்மானின் சொகுசு கார்கள் பறிமுதல்.. வரி செலுத்தாதல் சுங்கத்துறை நடவடிக்கை..

RUPA

Next Post

நவராத்திரியின் போது இந்த விஷயங்களை செய்தால் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும்.. நிதிப் பிரச்சினைகள் தீரும்..!!

Tue Sep 23 , 2025
If you do these things during Navratri, you will get the blessings of Goddess Lakshmi.. and financial problems will also be solved..!!
Navratri

You May Like