சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் ரூ.1,800 உயர்ந்தது..
இந்த நிலையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து, ரூ.9400க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து, ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : ரூ.55 செலுத்தினால், ரூ.3000 ஓய்வூதியம்..! யார் தகுதியானவர்கள்? எப்படி விண்ணப்பிப்பது?