தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தவெகவினர் யாரும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாகவோ நிற்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதுவரை எந்தவொரு நிதியுதவியும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தான், தவெக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த மீண்டும் கரூருக்கு செல்வது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவது மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
Read More : மணமேடை காணாமலேயே மண்ணில் மறைந்த சோகம்..!! விஜயை பார்க்க வந்த திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு..!!