Breaking : 13-ம் தேதி கரூர் செல்லும் விஜய்? 16 நாட்களுக்கு பின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடிவு..

vijay karur tvk

கரூர் துயர சம்பவம் நடந்து 16 நாட்களுக்கு விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.. அதன்படி அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து கூறினர்.. அப்போது தான் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார்.. இதற்காகவே காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.. மேலும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையையும் அவர் வழங்க உள்ளார்.. இதற்காக விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு தர கோரியும் தவெக தரப்பு நேற்று கரூர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தது..

அந்த மனுவில் “ தவெக தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கரூர் செல்ல உள்ளனர்.. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூர் சென்று மீண்டும் திருச்சி வரும் வரை விஜய் வாகனத்திற்கு காவல்துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்..

விஜய் வாகனத்திற்கு பின்னால் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என யாரும் பின் தொடர அனுமதிக்கக் கூடாது.. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை சுற்றி 1 கி.மீ தூரம் வரை எந்த கூட்டமும் கூட அனுமதிக்கக் கூடாது..” போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன..

இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் நடந்து 16 நாட்களுக்கு விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 13-ம் தேதி விஜய் கரூர் செல்லும் விஜய் அங்கு ஒரு திருமண மண்டபத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

மேலும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண தொகையையும் விஜய் வழங்குவார் என்று கூறப்படுகிறது. திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Read More : Flash : விஜய்யையும் அடித்து கொல்ல வாய்ப்பு.. 41 பேரை அடித்தே கொன்றனர்.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்து!

English Summary

It has been reported that Vijay will be visiting Karur for 16 days after the Karur tragedy.

RUPA

Next Post

பிஸியான லைஃப்ல தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சிக்காக ஒதுக்குங்க.. ஆயுள் அதிகரிக்கும்..!! - நிபுணர்கள் அட்வைஸ்..

Thu Oct 9 , 2025
In a busy life, set aside 15 minutes for walking every day.. Life will increase..!! - Expert Advice..
walking

You May Like