பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்..
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 3 மணி நேரமாக நடந்த உயர்நிலை ஆலோசனை முடிவடைந்தது.. பாஜக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு இடம்பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது..
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் “ தேசிய ஜனநாயக கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டது.. இனி இந்த கூட்டணியில் இந்த குழு இடம்பெறாது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம்.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார்.. இன்றைய நிலையில், எந்த கட்சிகளுடனும் கூட்டணி என்பது இல்லை.. எதிர்காலத்தில் சூழலுக்கு ஏற்பக கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் உறவு முறிக்கப்பட்டுள்ளது.. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது நாடே அறியும்.. நாங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை..” என்று தெரிவித்தார்.