BREAKING | நல்லகண்ணுவுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் கவலைக்கிடம்..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!

Nallakannu 2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் அரசியல் தலைவரான நல்லகண்ணு, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.


அந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு, அக்டோபர் 10-ஆம் தேதி உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இருப்பினும், ஒரு வார இடைவெளியிலேயே மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருந்தார்.

வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுவின் உடல்நிலை இன்று மீண்டும் பாதிக்கப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, உடனடியாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. நல்லகண்ணுவின் உடல்நிலை சீராகி ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : பெண்களுக்கு அடித்த செம ஜாக்பாட்..!! ரூ.3,00,000 வரை கடனுதவி வழங்கும் தமிழ்நாடு அரசு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

FLASH | கூண்டோடு ராஜினாமா..!! தவெகவில் இணைந்த 500 பேர்..!! கதிகலங்கி போன திமுக, அதிமுக..!!

Sun Dec 14 , 2025
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும் இணைந்து வருகின்றனர். சமீபத்தில், அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிகழ்வுக்குப் பிறகு, விஜய்யின் […]
TVK 2025

You May Like