2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புகள் :
* கார்பன் உமிழ்வை குறைக்க மின்சாரம், இரும்பு, ரசாயனம், சுத்திகரிப்புக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.
* 10% ஆக உள்ள முதலீட்டு வரம்பு ரூ.24% ஆக அதிகரிக்கப்படும்.
* நாடு முழுவதும் 5 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வங்கித்துறையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
* மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனிமேஷன், கேமிங் துறையை வளர்த்தெடுக்க மும்பையில் தனி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



