ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் – வனிதா தம்பதி. இவர்களுக்கு சத்யா என்ற 21 வயது மகள் உள்ளார். குடும்பத்துடன் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் குடியிருந்து வருகிறார்கள்.. இந்நிலையில், சந்தியாவிற்கு மணி என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.. இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர்களின் குடும்ப வழக்கப்படி சந்தியா குடும்பத்தினர் நேற்ற முன்தினமே மணமகன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
இந்நிலையில் நேற்றைய தினம் சந்தியா குளிப்பதற்காக, குளியலறைக்கு சென்றிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சந்தியா மயங்கி கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தியாவின் மரணத்தில் மரணம் இருப்பதால் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த பொதட்டூர்பேட்டை போலீசார் மணப்பெண் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
சந்தியாவின் குடும்பத்தினர், தங்கள் பெண்ணுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும், அவள் விருப்பத்துடன் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.. உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் மரணத்தின் உண்மையான காரணம் தெரியவரும்.. இன்று திருமணம் நடைபெற இருந்த தருணத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



