முதலிரவில் உடலுறவுக்கு மறுத்த மணப்பெண்..!! சைக்கோவாக மாறிய கணவன்..!! அறையில் பூட்டி வைத்து..!! பகீர் சம்பவம்..!!

rape 1

திருமணம் முடிந்த முதலிரவு அன்று தாம்பத்திய உறவுக்கு மறுத்த புதுமணப் பெண்ணை, அவரது கணவரே சுத்தியலால் தாக்கி, ஒரு அறையில் பூட்டி வைத்துச் சித்ரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, திருமண தகவல் மையம் மூலமாகப் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வா என்ற நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அகஸ்டின் நிதித் தொழில் (Financial business) செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவர் நல்ல மாப்பிள்ளை என்று நம்பிய மணமகள் வீட்டார், கடந்த நவம்பர் 23-ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

திருமணமான முதலிரவு அன்று, மணப்பெண் தனது கணவரிடம், “முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வோம், அதன் பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்” என்று கூறியதாக தெரிகிறது. மறுநாள் இரவும் தாம்பத்திய உறவு குறித்து கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற அகஸ்டின், அங்கிருந்த ஒரு சுத்தியலை எடுத்துத் தன் மனைவியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர், அவரை ஒரு அறையில் பூட்டி வைத்துச் சித்திரவதை செய்துள்ளார். படுகாயமடைந்த புதுமணப் பெண், உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், வேப்பேரி போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, அகஸ்டின் ஜோஷ்வாவைத் தேடிச் சென்று கைது செய்தனர். விசாரணையில், அகஸ்டின் ஏற்கனவே 2 பெண்களுடன் ‘லிவிங் டூ கெதர்’ முறையில் உறவில் இருந்ததுடன், அவர்களையும் சித்ரவதை செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

இந்த விவரங்கள் அனைத்தையும் மறைத்துதான் அவர் இந்த இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். விசாரணையின்போது, “திருமணத்தின்போது என்னை அவமதித்தார்கள். இவளும் உறவுக்குச் சம்மதிக்காததால் ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டேன்” என்று அகஸ்டின் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, சிறைவைத்தல், ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அகஸ்டின் ஜோஷ்வா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். திருமணத் தகவல் மையம் மூலம் தங்கள் மகளை ஒரு மனநோயாளிக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டோமே என்று மணமகள் வீட்டார் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

Read More : எடப்பாடி போட்ட பலே பிளான்..!! அடுத்த நொடியே தரைமட்டமாக்கிய செங்கோட்டையன்..!! விஜய் எடுத்த மாஸ்டர் முடிவு..!!

CHELLA

Next Post

ரூ.59,000 மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.22,411க்கு..! 1 கி.மீக்கு ரூ. 20 மட்டுமே செலவாகும்!

Sat Nov 29 , 2025
நாட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் மலிவான விலையில் சிறந்த மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர்களை பலரும் வாங்க விரும்புகின்றனர்.. இவர்களுக்கு கிரீன் கம்பெனி தயாரித்த உதான் மின்சாரக் ஸ்கூட்டர் சிறந்த தேர்வாக இருக்கும்.. இந்த நிறுவனத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு விலைகளில் மின்சாரக் கருவிகள் கிடைக்கின்றன. அவை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 25 ஆயிரம் வரை கிடைக்கின்றன. பேட்டரி: இந்த ஸ்கூட்டரில் ஒற்றை வேக லீட் […]
Green Udaan ev

You May Like