அஜித் குமார் வழக்கில் புகாரளித்த நிகிதா மீது பல மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில், அவர் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர் “ தம்பி அஜித் குமார் மரணம் கண்டிப்பா ஏற்றுக்கொள்ளவே முடியாத வேதனை.. நானும் என் தாயும் தினமும் அழுதுட்டு இருக்கோம். நான் காவல் நிலையத்திற்கு சென்றேன்.. புகார் கொடுத்தேன்.. இன்ஸ்பெக்டருக்காக நாங்கள் காத்திருந்தோம்.. அவர் இரவு 8.30 மணி போல வந்தார். அவர் வந்த உடனே அவரிடம் புகார் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டோம். அதன்பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது..
என்னை பொறுத்த வரை, நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக நான் குற்றவாளி கிடையாது.. அது கடவுளுக்கு தெரியும்.. என் மீது பல குற்றங்களை வாரி இறைக்கின்றனர்.. என் வயதான தாயாரை பராமரித்து வருகிறேன்.. கல்லூரி தொடங்கியதில் இருந்தே ஒரு நாள் மட்டுமே நான் கல்லூரிக்கு சென்றேன்.. என் தாய் உடல் நிலை சரியில்லை என்பதால், அவருடன் இருக்க வேண்டும் என்பதால் நான் சில நாட்களாகவே கல்லூரிக்கு செல்வதில்லை.. ஆனால் இன்று தான் நான் கல்லூரிக்கு செல்லவில்லை என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன..
எந்த ஒரு உயரதிகாரியையும் எனக்கு தெரியாது.. ஸ்டாலின் அவர்களுடன் என்னை சேர்த்து வைத்து பேசுகிறார்கள்.. தனிப்பட்ட வகையில் எனக்கு அவரை தெரியாது.. அஜித் மரணம் நடந்த பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நான் அஜித் அம்மாவிடம் பல முறை நான் சாரி கேட்க வேண்டும்.. என்னால் வெளியே வர முடியவில்லை.. என்னை சுற்றி கேமராக்கள் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன… எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது, பாதிக்கப்படாது என்று நினைப்பேன்.. பாம்பு வந்தால் கூட அதை கொல்ல வேண்டாம் என்று தான் சொல்வேன்.. எந்த உயிரை அழிப்பதும் நம் உரிமை இல்லை..
எனக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியை தெரியும் நான் ஃபோன் செய்தேன் என்று கூறுகிறார்கள்.. எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சேற்றை வாரி இறைப்பது என்பது தேவையில்லாத விஷயம்.. நான் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது. நான் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்.. எனது அப்பா ஒரு நேர்மையான அதிகாரி..
2011-ம் ஆண்டு நாங்கள் மோசடி செய்ததாக கூறுகின்றனர்.. மீடியாவில் இவ்வளவு பேசப்படுவதற்கும் இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணமே ஆலம்பட்டியை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் சண்முகம் என்பவர் தான்.. வழக்கை திசை திருப்பி என்னை கேவலப்படுத்துவதே அவர் நோக்கம்.. சண்முகம் ஒருமுறை எனது காரை படப்பிடிப்புக்காக கேட்ட போது, நான் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன்.. அதிலிருந்து அவருக்கு என் மீது வெறுப்பு கோபம்.. அஜித் மரண விஷயத்தில் அவர் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்..
அந்த தம்பியின் இறப்புக்கு வேதனை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் புகார் அளித்த உடன் வீட்டுக்கு வந்துவிட்டேன்.. அதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது.. யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.. எனது கால் ரெக்கார்டை பார்த்தாலே தெரியும்.. சட்டத்திற்கு முழு ஒத்துழைப்புக்கு கொடுக்க தயாராக உள்ளேன்.. நாங்கள் அப்பாவிகள்..” என்று தெரிவித்தார்..