BUDGET 2026 | ஸ்மார்ட்போன் முதல் சோலார் பேனல் வரை..!! பட்ஜெட் எதிரொலியால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன..?

Phone 2026

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உயிர்கொல்லி நோயான புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.


இதேபோல், சர்க்கரை நோய் தொடர்பான சில மருந்துகள் மற்றும் பரம்பரை உயர் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயர்தர மருத்துவச் சிகிச்சையை மிகக் குறைந்த செலவில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மீதான வரிக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, வரும் நாட்களில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், மைக்ரோவேவ் ஓவன் தயாரிப்பிற்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், சமையலறை சாதனங்களின் விலையும் நுகர்வோருக்குச் சாதகமாக மாறவுள்ளது.

மேலும், தனிநபர் பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது சர்வதேச சந்தையில் பொருட்களை வாங்குவோருக்குப் பெரும் லாபமாக அமையும்.

அதேபோல், வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் வெளிநாட்டுக் கல்விக்காகப் பணம் அனுப்புவோருக்கு இந்த பட்ஜெட் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதற்கு முன்பு 5% முதல் 20% வரை வசூலிக்கப்பட்டு வந்த டி.சி.எஸ் (TCS) வரி, தற்போது அதிரடியாக 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச கல்வி மற்றும் சுற்றுலாத் துறையை மேலும் ஊக்கப்படுத்தும்.

அதேபோல், விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த, விமான உதிரிபாகங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளுக்கு (MRO) வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்கள் குறைய மறைமுகமாக உதவும். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சோலார் பேனல்கள் தயாரிப்பிற்குத் தேவையான சோலார் கிளாஸ் மற்றும் பேட்டரி கனிமங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் சோலார் பேனல்களின் விலை குறைந்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சூரிய ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கக்கூடும். மேலும், தோல் பொருட்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டிருப்பதால், காலணிகள் மற்றும் தோல் சார்ந்த ஆடைகளின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.

Read More : காஃபி முதல் உரங்கள் வரை..!! மத்திய பட்ஜெட் எதிரொலியால் அதிரடியாக விலை உயரும் பொருட்கள் என்னென்ன..?

CHELLA

Next Post

வீட்டில் மணக்கும் விஷம்..!! குழந்தைகளின் உயிரே போகும் அபாயம்..!! பெற்றோர்களே உடனே தூக்கிப் போடுங்க..!!

Mon Feb 2 , 2026
வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் மற்ற பூச்சிகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த, நாம் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு பொருள் ‘நாப்தலின்’ உருண்டைகள் (Naphthalene Balls). துணிகள் வைக்கும் பீரோக்கள் முதல் கட்டிலின் இடுக்குகள் வரை ஆங்காங்கே போடப்படும் இந்த சிறிய வெள்ளை நிற உருண்டைகள், உண்மையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் என்பதைப் பலரும் உணருவதில்லை. குறிப்பாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ‘ரசூண்டைகள்’ பயன்படுத்துவது பெரும் […]
Naphthalene Balls 2026

You May Like