1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சிதைந்த பேருந்து !. பறிபோன 15 பயணிகளின் உயிர்!. இலங்கையில் சோகம்!.

srilanka bus accident

இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.


இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் கிழக்கே உள்ள எல்லா நகரத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒன்பது பெண்கள் ஆவர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த ஜீப்பில் மோதி 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Readmore: லண்டனில் வீடு, விலையுயர்ந்த கார்கள், சச்சின் டெண்டுல்கருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா?

KOKILA

Next Post

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயன்...! மாவட்ட ஆட்சியர் தகவல்...!

Sat Sep 6 , 2025
நான்காண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர், மகளிர், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் […]
womens loan central govt 11zon 1

You May Like