அமேசான் உங்களுக்காக Prime Day சலுகை தினங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த தினங்களில் சூப்பர் ஆஃபர்களை வழங்குகிறது. ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகள், மின்னணு உபகரணங்கள், ஆடைகள் என அனைத்திற்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. வெறும் 2 நாட்கள் மட்டுமே இந்த சலுகை தினம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் இந்த சலுகை தினங்கள் இருக்கும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி, வங்கி சலுகைகள், கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் என பலவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நேரத்தில் என்னென்ன சலுகைகளை முதற்கட்டமாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
பிரைம் டே விற்பனை நாட்களில் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 40% வரை தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான் 50-80% விழுக்காடு வரை தள்ளுபடி வழங்குவதால், ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் சிறந்த சலுகைகளையும் பெறலாம். கூடுதலாக, மளிகைப் பொருட்கள், குழந்தை பராமரிப்பு, உடல்நலம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற தினசரி உபயோக பொருள்களுக்கு 60% வரை தள்ளுபடியைப் பெறலாம். அதுமட்டுமின்றி, பிரைம் உறுப்பினராக நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை, ஆகியவற்றில் 70% வரை தள்ளுபடி பெறலாம். கூடுதலாக 70% வரை தள்ளுபடியுடன் புத்தகங்கள், பொம்மைகளை ஆகியவற்றை வீட்டிற்கு ஆர்டர் செய்யலாம்.
இவை வெறும் தள்ளுபடிகள் மட்டும் தான். ஆனால், இன்னும் சில சேமிப்புகள் உள்ளன. அமேசான் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் / ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ ஆகியவற்றில் 10% கூடுதலாக சேமிக்க முடியும் என்பதால், நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களின் விலையை மேலும் கணிசமாகக் குறைக்க முடியும். பிரைம் டே விற்பனை ஜூலை 15 அன்று தொடங்குகிறது. எனவே, நீங்கள் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை பெறப் போகிறீர்கள். இந்த சலுகைகளைப் பெற நீங்கள் அமேசான் பிரைம் உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் உறுப்பினராக ஆவதற்கு நீங்கள் சந்தா திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களை சந்தா திட்டத்தில் இணைத்துக் கொள்ள சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
Step 1: அமேசான் இணையதளம் அல்லது அமேசான் செயலிக்குச் செல்லவும்.
Step 2: உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை சரியாகக் கொடுத்து அமேசான் இந்தியா கணக்கை உருவாக்கவும்.
Step 3: இப்போது “Try Prime” என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இப்போது நீங்கள் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். மாதச் சந்தா ரூ.299-க்கும், ஆண்டு சந்தா ரூ.1499-க்கும் அமேசான் இப்போது வழங்கி வருகிறது
Step 5: அனைத்து பிரைம் உறுப்பினர் பலன்களுக்கான அணுகலைப் பெற, உங்கள் கார்டு விவரங்களை உள்ளிட்டு பணம் செலுத்த வேண்டும்.