fbpx

குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள் எது தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

அவசரத்திற்கு உதவும் என தங்கத்தைச் சேர்த்து வைப்பது கிட்டத்தட்ட அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் நடக்கும் ஒன்று. தங்கத்தை வைத்து எளிதாக பணத்தை புரட்ட முடியும். வங்கிகள் இதற்கு தனிநபர் கடன் வட்டியை விட குறைந்த வட்டியில் பணம் வழங்குகின்றன. குறைந்த தங்க நகைக்கடன் வட்டி வழங்கும் 5 வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள் எது தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

இந்தியன் வங்கி தங்கக் கடனுக்கு மிகக் குறைந்த வட்டியாக 7 சதவீதத்தை புளோட்டிங் ரேட்டாக வசூலிக்கிறது. அதாவது வட்டி விகிதம் மாறும் போது இதுவும் மாறும். பிராசசிங் கட்டணமாக கடனில் 0.56% விதிக்கப்படுகிறது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.1% முதல் 7.2% வரை நகைக் கடனுக்கு வட்டியாக வசூலிக்கிறது. இந்த வங்கியில் நகைக் கடனுக்கு பிராசசிங் கட்டணம் கடன் தொகையில் 0.75%. யூனியன் வங்கியில் நகைக் கடனுக்கு 7.25% முதல் 7.5% வரை வட்டி வசூலிக்கிறது. இதற்கு பிராசசிங் கட்டணம் 0.75%. யூகோ வங்கி நகைக் கடனுக்கு 7.4% முதல் 7.9% வட்டி வசூலிக்கிறது. இங்கு பிராசசிங் கட்டணம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை ஆகும். ஹெச்.டி.எஃப்.சி. வங்கி நகைக் கடனுக்கு 7.6% முதல் 16.81% வரை வசூலிக்கிறது. இங்கு பிராசசிங் கட்டணம் கடன் அளவில் 1% ஆகும்.

குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கும் வங்கிகள் எது தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

நகைக் கடனுக்கு தேவையானவை 22 காரட் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளுக்கு அதன் மதிப்பில் 75 சதவீதம் வரை நகைக் கடன் கிடைக்கும். அல்லது ஒரு கிராமிற்கு இவ்வளவு என வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச தொகை கடனாக கிடைக்கும். நகைக் கடன் பெற அடையாள அட்டை, முகவரிக்கான சான்று (ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட்) பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விவசாயத்திற்கான கடன் எனில் அதன் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கு மேல் எனில் நில ஆவணம் தேவைப்படும்

Chella

Next Post

ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா..!! தம்பதிகளின் தனிமையை படம் பிடித்த 4 பேர்..!! சிக்கியது எப்படி..?

Sun Oct 23 , 2022
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் OYO ஹோட்டல்களின் அறைகளில் தம்பதிகள் தனியாக இருக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் நோக்கில் யாரும் கண்டறிய முடியாத கேமராக்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். OYO ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து தங்கியிருந்த ஒரு கும்பல் யாரும் கண்டறிய முடியாத கேமராக்களை வைத்திருந்து விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், OYO ஹோட்டல்களில் மர்ம கும்பல் […]
ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா..!! தம்பதிகளின் தனிமையை படம் பிடித்த 4 பேர்..!! சிக்கியது எப்படி..?

You May Like