உலக சந்தைகளில் அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததை அடுத்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்த நிலைக்குள் தள்ளக்கூடும் என்கின்ற காரணத்தினால யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்கள் வாங்குபவர்களுக்கு கிரீன் பேக்- விலை தங்கத்தின் விலையை உயர்த்துகின்றது.
இந்தியாவின் டெல்லி, கல்கத்தா, மும்பையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.. 22 கேரன் 8 கிராம் தங்கம் விலை ரூ.37,600 என்ற விலையில் விற்கப்படுகின்றது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ.41,0008 ஆக உள்ளது.

வெள்ளி விலை, டெல்லி, கல்கத்தா, மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் விலை சீராக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.58,900 என்ற அளவில் விற்பனையாகின்றது. வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.600 குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை தமிழகத்தில் இம்மாதம் தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் உள்ளது. சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,730 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. சவரனுக்கு ரூ.37,840 என்ற விலையில் விற்பனையாகின்றது. 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,160 என சவன் விலை ரூ.41,280 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளி விலை சென்னையில் கிராமுக்கு ரூ.64.50 என்ற விலையில் விற்பனையகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,500 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போதைக்கு தங்கம் விலையை பொறுத்தவரை குறையும் வாய்ப்பில்லை என்றே கணிக்கப்படுகின்றது. சற்று குறையும் நேரத்தில் தங்கம் வாங்கலாம் என நிபுணர்களின் கருத்தாக உள்ளது.