fbpx

புது மொபைல் வாங்கணுமா ? வெறும் 101 ரூ. செலுத்துங்க போதும்..

தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு மொபைல் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் விவோ நிறுவனமும் சலுகையை அறிவித்துள்ளது. அதிகபணம் கொடுத்து வாங்க முடியாதவர்கள் வெறும் 101 ரூபாய் செலுத்தினால்போதும் என தெரிவித்துள்ளது.

Vivo X80 சீரிஸ், V25 சீரிஸ், Y75 சீரிஸ், Y35 போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களின் மீது விவோ இப்போது பிக் ஜாய் தீபாவளி சேல்ஸ் சலுகைகளை (Vivo Big Joy Diwali Sale Offers) அறிவித்துள்ளது

இந்தியாவில் முதல் முறையாக இத்திட்டம் வந்துள்ளது. புது போனை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விவோ 101 ரூபாய் செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது.

அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு சலுகை லைவ் இல் இருக்கும் என்பது. Vivo இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக, நம்ப முடியாத கேஷ்பேக் சலுகை, எக்ஸ்டெண்டட் வாரன்டி போன்றவற்றையும் இந்த ஆண்டு வழங்குகிறது.
இதில், விவோ ரசிகர்கள் கவனிக்க வேண்டிய மிகவும் உற்சாகமான அம்சம் என்னவென்றால், Vivo இந்த ஆண்டு முதல் முறையாக புதிய ஸ்மார்ட்போன்களை வெறும் 101 ரூபாய்க்கு வழங்குகிறது.

ஆம், சரியாக தான் படித்தீர்கள், வெறும் ரூ.101 என்ற தொகையை முன் பணமாகச் செலுத்தி, உடனே உங்களுக்கான புதிய டிவைஸை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று விவோ அறிவித்துள்ளது. இந்த முறையில் போன் வாங்க என்ன நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது என்பதை இறுதியில் பார்க்கலாம்.
இதேபோல, விவோவின் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையில் கூடுதல் தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதையும் மறக்காதீர்கள். இந்த பிக் ஜாய்ஸ் தீபாவளி விற்பனையின் போது Vivo அதன் X, V, மற்றும் Y சீரிஸ் போன்கள் மேல் தனித்தனி சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகை காலத்தில், வாடிக்கையாளர்கள் Vivo X80 அல்லது Vivo X80 Pro போன்ற மாடல்களை ICICI அல்லது SBI EMI விருப்பங்களுடன் வாங்கினால், ரூ.8,000 வரை கேஷ்பேக் நன்மையைப் பெறலாம். மேலும், அந்தத் தொகையை முழுமையாகச் செலுத்தினால், நிறுவனம் தனது எக்ஸ் சீரிஸ் போனுக்கு கூடுதலாக ஆறு மாத நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வழங்கும் என்று அறிவித்துள்ளது. உண்மையில், இது பெஸ்டா ஆஃப்பர் தான்.

இதேபோல், விவோவின் V25 தொடர் வாங்குபவர்கள் ICICI அல்லது SBI EMI விருப்பங்களைப் பயன்படுத்தி ரூ.4,000 வரை கேஷ்பேக்கைப் பெறலாம். விவோ வி25 சீரிஸ் போன்களுக்கு ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் நிறுவனம் வழங்குகிறது. Vivo Y சீரிஸ் போன்களை வாங்குபவர்கள் ICICI அல்லது SBI EMI விருப்பங்களைப் பயன்படுத்தி ரூ.2,000 வரை கேஷ்பேக்கைப் பெறலாம்.
Vivo Y சீரிஸ் சாதனங்களில் ரூ.10,000 மதிப்புள்ள ஜியோ டிஜிட்டல் லைஃப் நன்மைகளை Vivo வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y75, Y35 போன்ற Y தொடர் சாதனங்களில் பயனர்கள் ஆறு மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் பெறுகிறார்கள். சரி, இப்போது விவோ அறிவித்துள்ள Vivo Rs 101 ஸ்மார்ட்போன் ஆஃபர் பற்றி பார்க்கலாம். இந்த புதிய சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், புதிய Vivo ஃபோனை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வெறும் 101 ரூபாய்க்கு வாங்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தச் சலுகையின்படி, வாடிக்கையாளர்கள் V, X அல்லது Y சீரிஸ் வரிசையில் கிடைக்கும் எந்த மாடலை வேண்டுமானாலும் வாங்கலாம். அதுவும், வெறும் ரூ.101 என்ற தொகையை ஆரம்பக் கட்டணமாகச் செலுத்தி, போனை சொந்தமாக்கிக்கொள்ளலாம். இருப்பினும், மிச்ச தொகையை வாடிக்கையாளர், அருகிலுள்ள சில்லறை விற்பனையாளரிடம் சென்று பேமெண்ட் செய்ய வேண்டுமா இல்லையா என்பதைத் தெளிவாக குறிப்பிடவில்லை. பெரும்பாலும் பேலன்ஸ் தொகையை நிறுவனம் EMI ஆக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

வெளிநாட்டில் இருந்து கொண்டே  சில்மிஷ வேலைகள்… காதல் மன்னன் காசியின் நண்பர்கைது ..

Mon Oct 17 , 2022
நாகர்கோவிலில் வலைத்தலங்கள் மூலமாகவே பெண்களுக்கு வலை விரித்து 120 பெண்களை ஏமாற்றிய காசி என்பவரின் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். காசி , நாகர்கோவிலில் ஆன்லைன் மூலமாக பெண்களிடம் பேசி , பழகி காதல் வார்த்தைகளை அள்ளி வீசி வலையில் விழ வைத்து பின்னர் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளான். இது போன்று 102 பெண்களிடம் காதல் மன்னன் தன்கைவரிசையை காட்டியுள்ளானர். இதையடுத்து […]
28 ஆண்டுகளாக

You May Like