இயேசு மீது ஆணையாக எப்போதும் எவருடனும் கூட்டணி இல்லை.. சீமான் திட்டவட்டம்!

seeman440867 1658466665 1679301482 1680611327

சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ எனக்கு மும்மொழியும் இல்லை, இரு மொழியும் இல்லை.. ஒரே மொழி தாய்மொழி தான்.. சாதி, மதம் எல்லாம் என் அடையாளம் இல்லை.. நான் இந்து என்றோ முஸ்லீம் என்றோ சாதி பெயரை வைத்தோ அடையாளப்படுத்தி கொள்ள முடியாது.


பாஜக உடன் தேர்தல் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கின்றனர்.. அப்படி வைப்பதாக இருந்தால் இந்த 15 ஆண்டுகளில் கூட்டணி வைத்திருக்க மாட்டேனா.? மதங்கள் எங்கள் அடையாளம் இல்லை என்பதற்காக நாம் தமிழர் என்ற பெயரில் கட்சியை தொடங்கினோம்.. தமிழர் என்ற இனம் தான் எங்கள் அடையாளம்..

ஈழத்திலே கொத்து கொத்தாக செத்து விழுந்தோம்.. நாடார், கிறிஸ்தவர், செட்டியார் இறந்தார்கள் என்று பதிவு செய்யவில்லை.. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிட்டனர்.. பிணமாக விழும் போதும் இனமாக தான் விழுந்தோம்.. நாம் தமிழர் கட்சி எந்த காலத்திலும் இந்திய கட்சி, திராவிட கட்சிகளோடு கூட்டணி வைக்காது. அதே நிலைப்பாட்டில் 15 ஆண்டுகளாக நிற்கிறேன்..

அதே நிலையில் 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.. தமிழ் சமூகத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.. 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம், 2029 தேர்தலில் தனித்து நிற்போம்.. தனித்துவத்தோடு நிற்போம். தோல்வியை கண்டு துவண்டு போவது நபர்கள் நாங்கள் இல்லை.. வெற்றி, தோல்வியை சமமாக பார்ப்பவர்கள் நாங்கள்

தமிழ்நாட்டில் பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தொடர்ச்சியாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் தான்.. யாருடன் கூட்டணி கிடையாது.. எந்த காலத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.. பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.. மக்களை நம்பி மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடும் கட்சி நாம் தமிழர்.. நாங்கள் மக்களுக்கானவர்கள்.. எனக்கு பாதுகாப்பு கொடு என்று கேட்பவர்கள் நாங்கள் இல்லை.. எனவே அவருடன் கூட்டணியா இவருடன் கூட்டணி என்ற கேள்விக்கெல்லாம் ஒரே பதில்.. இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் எவருடனும் கூட்டணி இல்லை.” என்று தெரிவித்தார்..

Read More : பரபரக்கும் 2025 தேர்தல் களம்.. முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்! அரூரில் போட்டியிடுவது இவர் தான்!

RUPA

Next Post

ஏலியன் தாக்குதல், 3ம் உலகப் போர், AI ஆதிக்கம்.. 2026க்கான பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்!

Sat Oct 11 , 2025
பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா எதிர்காலத்தை துல்லியமாக கணித்ததற்காக புகழ்பெற்றார்.. ஒவ்வொரு ஆண்டும் பற்றிய அவரது கணிப்புகள் தொடர்ந்து பரபரப்பான விஷயமாகவே உள்ளன. அதனால்தான் அவர் ‘பால்கன் நோஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படுகிறார். 20 ஆம் நூற்றாண்டில் நடந்த பல நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்தார். 2025 இல் அவர் கணித்த சில விஷயங்கள் உண்மையாகிவிட்டன. 2026 மனிதகுல வரலாற்றில் மிகவும் பயங்கரமான ஆண்டாக மாறும். ஐரோப்பாவில் நடக்கும் […]
baba vanga

You May Like