இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் இருவருக்கும் விவாகரத்து வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்றம் மாதந்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜய் முகர்ஜி, ஹசின் ஜஹானின் தனிப்பட்ட செலவுக்காக ரூ.1.5 லட்சமும், மகளுக்காக ரூ.2.5 லட்சமும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். முந்தைய வழக்குகளில், அலிப்பூர் நீதிமன்றம் முதலில் ரூ.80,000 வழங்க உத்தரவிட்டது. பின்னர் மாவட்ட நீதிபதி இந்த தொகையை மனைவிக்கு ரூ.50,000 மற்றும் மகளுக்கு ரூ.80,000 என மாற்றினார். இதையடுத்து, ஹசின் ஜஹான் மேல்முறையீடு செய்த நிலையில், தற்போதைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உடல்நலக் குறைவால் இந்திய அணியில் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டுள்ள ஷமி, இந்த நீதிமன்ற தீர்வுக்குப் பின் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. கடந்த ஜூன் 2023-இல் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் அவர் கடைசியாக விளையாடியுள்ளார்.
பிப்ரவரி 2024-இல் கணுக்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஷமி, அதிலிருந்து மீண்டபினும் முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
தலைமைத் தேர்வாளர் அஜித் அக்ரகர், “ஷமி உடற்தகுதியற்றார் என்பதையும், சிவப்பு பந்து கிரிக்கெட்டின் அழுத்தத்தை அவரது உடல் தாங்க முடியாது என்பதையும் மருத்துவக் குழு தெரிவித்ததால், அவரை அணியில் சேர்க்க முடியவில்லை” என தெரிவித்தார்.
Read more: விவசாயிகள் கவனத்திற்கு… ஜுலை 31-ம் தேதி வரை பயிர் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்…!